Sunday, 13 November 2011

கூடங்குளம் அணு மின் நிலைய போரட்டம் தொடர்கிறது



கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்
நேற்று 4 வது நாளாக 22 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அணுமின்நிலைய பணிக்கு சென்றவர்களை கூடங்குளம் பொதுமக்கள் திரண்டு நின்று முற்றுகையிட்டு பணிக்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு வேலைக்கு சென்ற ஊழியர்களை பொதுமக்கள் இன்றும் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் கூடங்குளத்ததில் இன்றும் பரபரப்புஏற்பட்டது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணு விஜய்நகரில் இருந்து, கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்கள் பஸ்களில் இன்று காலை வேலைக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த பஸ்களை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கூடங்குளம் போலீஸ் நிலையம் அருகே வைத்து வழிமறித்து நிறுத்தினர்.
கூடங்களம் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் ஜெயலலிதா போராட்டதைநிறுத்துவதற்கான  அத்தனைநடவடிக்கைகளையும் மேற்கொள்வார் என எதிர்வுகூறப்படுகிறது.
மன்மோகன் சிங் மின்சாரப் பற்றாக்குறை  குறித்து மட்டுமே பேசுகிறார்.
அணு ஆற்றலின் அபாயம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாதபோது, அதன் தவிர்க்க இயலாமை குறித்து அரசும் ஆளும் வர்க்கமும் பேசத் தொடங்குகின்றன. அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், நகரங்கள், பெருகி வரும் மின்சார சாதனங்கள், நுகர்பொருட்கள் ஆகியவற்றைக் காட்டி, இந்த மின்சாரத் தேவையை ஈடுசெய்ய வேறு என்ன வழி என்பதை நீங்கள் கூறுங்கள் என்று நம்மைக் கேட்கிறார்கள். அந்நியச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத் தொழிற்சாலைகள், அவர்களுக்கான தடையில்லா மின்விநியோகம், உலகமயம் தோற்றுவிக்கும் நகரமயம், நுகர்பொருள் கலாச்சாரம், அதற்கான கேளிக்கை விடுதிகள், மால்கள், ஒளிவெள்ளத்தில் திளைக்கும் நகர்ப்புறக் கடைவீதிகள்என்று பெரும்பான்மை மக்களைச் சுரண்டுகின்ற, ஒதுக்குகின்ற ஒரு வளர்ச்சிப் பாதையைத் தீர்மானித்துக்

No comments:

Post a Comment